உள்நாடு

இலங்கை வரும் ஈரான் ஜனாதிபதி

(ஏ.ஆர்.ஏ.பரீல்)

‘உமா ஓயா’ பல்­நோக்கு அபி­வி­ருத்தித் திட்­டத்தை மக்கள் பாவ­னைக்கு கைய­ளிக்கும் வைப­வத்தில் கலந்­து­கொள்­வ­தற்­காக உத்­தி­யோ­க­பூர்வ விஜ­ய­மொன்றை மேற்­கொண்டு ஈரான் ஜனா­தி­பதி இப்­ராஹிம் ரைஸி எதிர்­வரும் 24ஆம் திகதி இலங்கை வர­வுள்ளார்.

குறிப்­பிட்ட திட்டம் ஈரான் அபி­வி­ருத்தி வங்­கியின் கடன் உத­வியின் கீழ் கடந்த 2010ஆம் ஆண்டு ஆரம்­பிக்­கப்­பட்­டது. இத்­திட்­டத்தின் கீழ் தேசிய மின் கட்­ட­மைப்­புக்கு 120 மெகா வோட் மின்­சாரம் உள்­வாங்­கப்­ப­ட­வுள்­ளது.

மின்­சார உற்­பத்­திக்கு மேல­தி­க­மாக இத்­திட்­டத்தின் கீழ் குடிநீர் மற்றும் விவ­சாயத்துக்கு தேவை­யான நீர் விநி­யோ­கமும் திட்­ட­மி­டப்­பட்­டுள்­ளது.
­வி­ருத்தி வங்­கியின் கடன் உத­வியின் கீழ் கடந்த 2010ஆம் ஆண்டு ஆரம்­பிக்­கப்­பட்­டது. இத்­திட்­டத்தின் கீழ் தேசிய மின் கட்­ட­மைப்­புக்கு 120 மெகா வோட் மின்­சாரம் உள்­வாங்­கப்­ப­ட­வுள்­ளது.

மின்­சார உற்­பத்­திக்கு மேல­தி­க­மாக இத்­திட்­டத்தின் கீழ் குடிநீர் மற்றும் விவ­சாயத்துக்கு தேவை­யான நீர் விநி­யோ­கமும் திட்­ட­மி­டப்­பட்­டுள்­ளது.

529 மில்­லியன் அமெ­ரிக்க டொலர் செலவில் இத்­திட்­டத்தின் நிர்­மாண வேலைகள் கடந்த 2010 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 15ஆம் திகதி ஆரம்­பிக்­கப்­பட்­டது. இத்­திட்­டத்தின் நிர்­மாண வேலைகள் கடந்த 2015ஆம் ஆண்டு இறு­தியில் பூர்த்தி செய்­யப்­ப­டு­வ­தற்குத் திட்­ட­மிட்­டி­ருந்த போதும் பல்­வேறு தடைகள் கார­ண­மாக கால­தா­மதம் ஏற்­பட்­டமை குறிப்­பி­டத்­தக்­கது.

இஸ்­ரேலின் அமைச்­ச­ரவை கூட்­டத்தில் ஈரா­னுக்குள் தாக்­குதல் நடத்த தீர்­மானம் மேற்­கொள்­ளப்­பட்­டுள்ள நிலையில் ஈரான் ஜனாதிபதியின் இலங்கை விஜயம் இடம்பெறவுள்ளமை சர்வதேச அளவில் கவனயீர்ப்பைப் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்

Related posts

நாடளாவிய சகல பாடசாலைகளும் நாளை திறக்கப்படும்

கடந்த 24 மணித்தியாலத்தில் 45 பேர் கைது

மேல் மாகாணத்திலிருந்து வௌியேறியவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை