உள்நாடு

களுத்துறை பகுதியில் 2 பெண்களின் சடலங்கள் மீட்பு

களுத்துறை, இசுரு உயன பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் நேற்று இரவு இரண்டு வயோதிப பெண்களின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. வீட்டில் இருந்து கடும் துர்நாற்றம் வீசுவதாக அப்பகுதி மக்கள் பொலிஸாருக்கு தகவல் வழங்கியதை அடுத்து சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.அச்சடலங்கள் சிதைந்த நிலையில் இருந்ததால் சில நாட்களுக்கு முன்னர் இருவரும் உயிரிழந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதாக களுத்துறை தெற்கு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த கொலை சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை களுத்துறை தெற்கு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts

ஆற்றை அகலப்படுத்த நடவடிக்கை

இந்திய வெளிவிவகார அமைச்சர் இலங்கைக்கு

அமேசன் உயர்கல்வி நிறுவனத்தின் மாபெரும் பட்டமளிப்பு விழா 2023