உள்நாடு

இலங்கையில் இன்று முதல் புதிய விசா நடைமுறை.

புதிய வீசா முறைமைய இன்று முதல் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக குடிவரவு குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பான விசேட வர்த்தகமானி வெளியிடப்பட்டுள்ளதாக திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

அதற்கமைய புதிய வீசா முறைமை, பூர்த்தி செய்யப்பட வேண்டிய தேவைகள் மற்றும் அது தொடர்பான கட்டணங்கள் மற்றும் இலங்கையில் தங்கியிருக்கும் காலம் ஆகியவை 27.11.2023 அன்று விசேட வர்த்தமானி மூலம் வெளியிடப்பட்டுள்ளதாக திணைக்களம் தெரிவித்துள்ளது.

அதனடிப்படையில் ஒருவருட நுழைவு சுற்றுலா விசாவுக்கான கட்டணம் 200 அமெரிக்க டொலர் அறவிடப்படவுள்ளது.

அதேவேளை இரண்டு வருட நுழைவு சுற்றுலா விசாவுக்கான கட்டணம் 300 அமெரிக்க டொலர்களாக உள்ளது.

மேலும், 10 வருடங்களுக்கான நுழைவு சுற்றுலா விசாவுக்கான கட்டணம் 1000 அமெரிக்க டொலர்களாக காணப்படுகின்றது.

Related posts

சந்தையில் மீண்டும் எரிவாயு தட்டுப்பாடு

சம்பிக்க ரணவக்கவின் சாரதிக்கு விளக்கமறியல்

தனது தமிழ் வாக்குகளை பறிக்க சஜித் எடுத்த முயற்சி தோல்வி – ஜனாதிபதி ரணில்

editor