இந்தியன் பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கெதிராக நேற்று (14) இடம்பெற்ற போட்டியில் சென்னை சுப்பர் கிங்ஸ் அணி 20 ஓட்டங்களால் வெற்றியீட்டியது.
அந்த போட்டியில் அபாரமாக பந்துவீசிய மத்திஷ பத்திரன 28 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுகளை வீழ்த்தி ஆட்டநாயகன் விருதை வென்றார்.
இந்தப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய சென்னை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 206 ஓட்டங்களை எடுத்தது.
அந்த அணி சார்பில் சிவம் துபே ஆட்டமிழக்காமல் 66 ஓட்டங்களை எடுத்தார்.
அணியின் தலைவர் Ruturaj Gaikwad 69 ஓட்டங்களை பெற்றதுடன் இறுதியாக களமிறங்கிய மகேந்திரசிங் தோனி 04 பந்துகளுக்கு முகம் கொடுத்து 3 சிக்ஸர்களை விளாசி 20 ஓட்டங்களை பெற்றிருந்தார்.
பின்னர் பதிலுக்கு துடுப்பாடிய மும்பை இந்தியன்ஸ் அணியால் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 186 ஓட்டங்களை பெற்று தோல்வியடைந்தது.
துடுப்பாட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி சார்பில் ரோகித் சர்மா ஆட்டமிழக்காமல் 105 ஓட்டங்களை எடுத்திருந்தார்.