உள்நாடு

மே மாதம் முதலாம் வாரத்தில் க.பொ.த உயர்தர பரீட்சை பெறுபேறுகள் வெளியிடப்படும்: கல்வி அமைச்சு

சாதாரண பரீட்சை தொடர்பான கட்டமைப்புகளை கல்வி அமைச்சகம் அறிவித்துள்ளது.

2023 க.பொ.த உயர்தரப் பரீட்சைகளின் பெறுபேறுகளை 2024 மே மாத தொடக்கத்தில் வெளியிட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக கல்வி அமைச்சு அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.

2023 ஆம் ஆண்டுக்கான க.பொ.த சாதாரண தரப் பரீட்சைகளை இவ்வருடம் மே மாத நடுப்பகுதியில் நடத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.

குறித்த பரீட்சைக்கான கால அட்டவணை ஏற்கனவே தயாரிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

Related posts

நிதி அமைச்சராக பசில் ராஜபக்ஷ

எப்பொழுதும் நாட்டை முதன்மைப்படுத்தி மக்களின் பிரச்சினைகளை தீர்ப்பதே எமது நோக்கமாகும் – சஜித்

editor

வெள்ள அனர்த்தம்: கொலன்னாவ,களனி மற்றும் அம்பத்தளை பிரதேசங்களுக்கு ஜனாதிபதி விஜயம்