உள்நாடு

காஸா சிறுவர்களுக்காக இலங்கை அரசாங்கத்தின் ஒரு மில்லியன் அமெரிக்க டொலர் நன்கொடை

காஸா பகுதியில் இடம்பெறும் மோதல்களினால் பாதிக்கப்பட்ட சிறுவர்களுக்காக இலங்கை அரசாங்கத்தின் ஒரு மில்லியன் அமெரிக்க டொலர் நன்கொடையை ஐக்கிய நாடுகள் சபையின் உத்தியோகபூர்வ முகவர் நிறுவனத்தின் ஊடாக பாலஸ்தீன அரசாங்கத்திடம் கையளிக்கும் நிகழ்வு நேற்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது.

இதற்கான காசோலை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் இலங்கைக்கான பலஸ்தீன தூதுவர் கலாநிதி சுஹேர் ஹம்தல்லாஹ் ஸைதிடம் உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டது.

ஜனாதிபதி அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற காசோலை கையளிக்கும் நிகழ்வில், வெளிவிவகார அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி, ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க, வெளிவிவகார அமைச்சின் செயலாளர் அருணி விஜேவர்தன மற்றும் இலங்கைக்கான பலஸ்தீன தூதரக சிரேஷ்ட அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்

Related posts

ஊரு ஜுவாவின் உறவினர் கைது

புறக்கோட்டையில் சில வர்த்தக நடவடிக்கைகளுக்கு அனுமதி இல்லை

ஊரடங்குச் சட்டம் பற்றிய புதிய அறிவித்தல்