உள்நாடு

புறக் கோட்டை மிதக்கும் சந்தை (புளோட்டிங் மார்கெட்) மீள் புனரமைப்பு

புறக்கோட்டை தனியார் பஸ் நிலையத்திற்கு முன்பாக உள்ள மிதக்கும் சந்தை (புளோட்டிங் மர்கெட்) மீள புனரமைத்து அது சுற்றுலாப் பிரயாணிகள் கவரக்கூடிய வகையில் பயன்படுத்த கூடிய வகையில் ஜப்பான் முதலீட்டுக் கம்பனி ஒன்று மீள பாரம் எடுத்து அதனை அடுத்த 6 மாதங்களுக்குள் அழகுபடுத்த உள்ளது. இதற்கான ஒப்பந்தம் நகர அபிவிருத்தி அதிகார சபையில் அதிகாரிகளுடன் கைச்சாத்திடப்பட்டது.
இத் திட்டத்தினை ஏற்கனவே 2014 காலப்பகுதியில் முன்னாள் ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ அவர்கள் பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் செயலாளராக பதவி வகித்த காலத்தில் 352 மில்லியன் ருபா செலவிடப்பட்டு செப்பனிட்டு திறந்து வைக்கப்பட்டது. இருந்தும் இத் திட்டம் வெற்றியளிக்கவில்லை மீண்டும் கோட்டபாய ராஜபக்ஷ அவர்கள் ஜனாதிபதியாக பதவி காலத்திலும் மீள 25 மில்லியன் ருபா புனர்நிர்மாணம் செய்யப்பட்டு மீளத் திறந்து வைக்கப்பட்டது அத்திட்டத்தில் ்இத் திட்டம் வெற்றியளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது என நகர அபிவிருத்தி அதிகார சபையின் ஊடக அறிக்கையில் தெரிவித்துள்ளது.

Related posts

இரத்து செய்யப்பட்ட கட்சி தலைவர்களுக்கான கூட்டம்

கடந்த 24 மணித்தியாலத்தில் 1,600 பேர் கைது

20ஆவது அரசியலமைப்பு திருத்தம் – சட்டமா அதிபரின் மீளாய்வுக்கு