உள்நாடு

பசில் ஜனாதிபதிக்கு இடையில் இன்று சந்திப்பு

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கும் பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகரும் முன்னாள் அமைச்சருமான பசில் ராஜபக்ஷவுக்கும் இடையிலான சந்திப்பு ஒன்று இன்று (21) பிற்பகல் ஜனாதிபதியின் இல்லத்தில் நடைபெறவுள்ளது.

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் மற்றும் பொதுத் தேர்தல்கள் உள்ளிட்ட அரசியல் விவகாரங்கள் தொடர்பிலான விடயங்கள் இந்த சந்திப்பில் கலந்துரையாடப்படவுள்ளன..

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, பசில் ராஜபக்ஷ மற்றும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஆகியோருக்கு இடையிலான சந்திப்பொன்றும் அண்மையில் இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

பொதுத் தேர்தலை முன்கூட்டியே நடத்துவது அரசியல் ரீதியாக சாதகமானது என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் உறுப்பினர்கள் சிலர் கருதுவதுடன், பசில் ராஜபக்சவும் இதனை வலியுறுத்தி வருகிறார்.

Related posts

வர்த்தகர் தினேஷ் ஷாப்டரை படுகொலை செய்துள்ளதாக நீதிமன்றம் அறிவிப்பு

நுகேகொட – மஹரகம வீதியின் அம்புல்தெனிய சந்தியில் இருந்து பூட்டு

மேலும் 320 பேர் கொரோனா தொற்றிலிருந்து குணம்