உள்நாடு

கிளிநொச்சி பொன்னகர் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் பலி

கிளிநொச்சி பொன்னகர் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் பலியாகியுள்ளார்.

குறித்த விபத்து இன்று இரவு இடம்பெற்றுள்ளது. விபத்தில் பொன்னகர் பகுதியை சேர்ந்த சந்தானம் புஸ்பராசா என்ற 34 வயதுடைய நபரே உயிரிழந்துள்ளார்.

யாழ்ப்பாண பல்கலைக்கழக கிளிநொச்சி வளாகம் அமைந்துள்ள பகுதிக்கு அருகில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.

மோட்டார் சைக்கிளை ரிப்பர் வாகனம் மோதியதில், மோட்டார் சைக்கிளில் பயணித்த நபர் உயிரிழந்துள்ளார்.

குறித்த வீதியானது கனரக வாகனங்கள் பயணிப்பதற்கு போதிய இடவசதி குறைவான நிலையில், ரிப்பர் வாகனங்கள் அதிகளவில் குறித்த வீதியை பயன்படுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

உயிரிழந்தவரின் சடலம் கிளிநொச்சி வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ள நிலையில், விசாரணைகளின் பின்னர் உறவினர்களிடம் கையளிக்கப்படவுள்ளது.

சம்பவம் தொடர்பில் கிளிநொச்சி பொலிசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts

தனக்கு எவ்வித நியமனக் கடிதங்களும் வழங்கப்படவில்லை – ஷாபி

நாட்டில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை உயர்வு

GMOA சிவப்புச் சமிஞ்சை