உள்நாடு

சில அரசியல்வாதிகள் நாட்டை விட்டு வெளியேற தீர்மானம்

தற்பொழுது எமது நாட்டில் நிலவி வரும் பொருளாதார நெருக்கடி காரணமாக சில அரசியல்வாதிகள் பதவி விலகி நாட்டை விட்டு வெளியேறத் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மூன்று நாடாளுமன்ற உறுப்பினர்கள் பதவி விலகி வெளிநாடு செல்ல திட்டமிட்டுள்ளதாக சில ஆதாரம்காட்டி தகவல் வெளியிடப்பட்டுள்ளது.இவ்வாறு வெளிநாடு செல்ல இருக்கும் மூன்று நாடாளுமன்ற உறுப்பினர்களும் ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் உறுப்பினர்கள் என தெரிவிக்கப்படுகின்றது.

நாடாளுமன்றிற்கு மீண்டும் தெரிவாகும் சாத்தியப்பாடுகளில் நிலவி வரும் நிச்சயமற்ற தன்மையே இவ்வாறு வெளிநாடு செல்ல முயற்சிப்பதற்கான பிரதான காரணம் என தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

அனர்த்தத்தில் உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் இரங்கல்

இதுவரை 1633 பேர் கைது

தடுப்பூசி பெற இணையத்தளம்