உள்நாடு

கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் ஏற்பாட்டில் இந்தியாவில் இருந்து ஆதீனங்கள் இலங்கைக்கு வருகை!

பஞ்ச ஈஸ்வரங்களில் ஒன்றாக விளங்கும் திருக்கோணேஸ்வரம் இலங்கையின் புகழ்பெற்ற ஆலயங்களுள் ஒன்றாக விளங்குகின்றது. உலகில் உள்ள வழிபாட்டுத்தலங்களில் மிகப்பழமையானதாகும்.இக்கோவில் பதினெட்டு மகா சக்தி பீடங்களில் தேவியின் இடுப்புப் பகுதி விழுந்த பீடமாகவும் தந்திர சூடாமணி கூறும் 51 சக்தி பீடங்களில் தேவியின் சிலம்புகள் விழுந்த பீடமாகவும் கருதப்படுகிறது.7 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த திருஞானசம்பந்தர் இக்கோயிலின் மீது பதிகங்கள் பாடியுள்ளார்.
இவ்வாறு வரலாற்று சிறப்பு மிக்க திருக்கோணேஸ்வர ஆலயத்தில் இடம்பெற்று வருகின்ற சிவராத்திரி நிகழ்விற்கு கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் ஏற்பாட்டில் இந்தியாவில் இருந்து ஆதீனங்கள் இலங்கைக்கு அழைத்து வரப்படுகின்றனர்.
நேற்றைய தினம் சிவராத்திரி நிகழ்வில் தமிநாடு திருநெல்வேலி பெருங்குளம் திருக்கைலாய பரம்பரை செங்கோல் ஆதீனம்,103வது குருமகா சன்னிதானம் ஶ்ரீலஶ்ரீ சிவப்பிரகாச சத்தியஞான தேசிக பரமாச்சார்ய சுவாமிகள் விசேட அழைப்பாளராக கலந்துகொண்டு ஆன்மீக சொற்பொழிவை வழங்கினார்.
பெருந்திரளான பக்தர்கள் இந்த நிகழ்வுகளில் கலந்துகொண்டு வருகின்றனர்.

Related posts

ஹோமாகம பகுதியில் துப்பாக்கிகள் மீட்பு : விசாரணைகள் CID இடம்

ஊடகப் பொறுப்பை ஊடகத்துறை அமைச்சர் விளக்குகிறார்

ஊடகவியலாளரிடம் மன்னிப்பு கோரினார் [UPDATE]