உள்நாடுசூடான செய்திகள் 1

தேர்தல் நடவடிக்கைகளுக்காக அரசியல் அமைச்சரவை நியமனம்!

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, ஜனாதிபதித் தேர்தல் நடவடிக்கைகளுக்காக அரசியல் அமைச்சரவையொன்றை நியமித்துள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அதே நேரத்தில், தேர்தல் திட்டமிடலை நிர்வகிக்க சிறப்புக் குழுவும் நியமிக்கப்பட்டுள்ளது.

நியமிக்கப்பட்ட அரசியல் அமைச்சரவை குழு  கடந்த திங்கட்கிழமை இரவு கூடியதாக அரசாங்கத்தின் உள்ளக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அமைச்சரவையில் இடம்பெறாத ஜனாதிபதி பணிக்குழாமின் பிரதானி சாகல ரத்நாயக்க மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகே ஆகியோரும் உள்ளடக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

தேர்தல் திட்டங்களை நிர்வகிப்பதற்காக அமைச்சர்களான பிரசன்ன ரணதுங்க, டிரான் அலஸ், ஹரின் பெர்னாண்டோ, மனுஷ நாணயக்கார மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களான நிமல் லான்சா, மஹிந்தானந்த அளுத்கமகே ஆகியோரைக் கொண்ட குழுவும் நியமிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இந்த குழு கடந்த புதன்கிழமை கூடியதாகவும், எதிர்காலத்தில் வாரத்திற்கு ஒருமுறை கூடும் எனவும் அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Related posts

விஜயதாச ராஜபக்ஷ கோட்டாபயவுக்கு ஆதரவு

இலங்கையில் மேலும் ஒருவர் கொரோனாவுக்கு பலி

வன்னி மாவட்ட நிலையான அபிவிருத்திக்கு இன,மத பேதங்களைக் கடந்து ஒன்றிணைந்து பணியாற்ற வருமாறு அமைச்சர் ரிஷாட் அழைப்பு!