இந்த வருடத்தில் நீர் கட்டணத்தை அதிகரிப்பதற்கான எவ்வித எதிர்ப்பார்ப்புகளும் இல்லை என அமைச்சர் ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி ஊடக மையத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு, அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
கடந்த ஆண்டு அறிமுகம் செய்வதாக அறிவித்த நீர் கட்டண சூத்திரம் தயாரிக்கும் பணி நிறைவடைந்துள்ளது.
நீர் கட்டண சூத்திரத்தில் உள்ள விடயங்கள் குறித்து மேலும் ஆராய்ந்து வருகிறோம்.
மக்கள் மீது மேலும் தேவையற்ற சுமையை திணிக்கவோ அதனை அமுல்படுத்தவோ தற்போது தாம் எதிர்பார்க்கவில்லை என அவர் தெரிவித்தார்.
இதேவேளை, மலையகத் தமிழ் மக்களின் பிரச்சினைகளை நாளாந்த வேதனத்திற்குள் மாத்திரம் மட்டுப்படுத்தாமல் அவர்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவது தொடர்பிலும் அக்கறை செலுத்த வேண்டும் என அமைச்சர் இதன்போது தெரிவித்தார்.
தொழிலாளர்களுக்கான ஏனைய சலுகைகள் தொடர்பில் கவனம் செலுத்தாத பெருந்தோட்ட நிறுவனங்கள் குறித்து அவதானம் செலுத்தப்பட்டு வருவதாகவும் அமைச்சர் ஜீவன் தொண்டமான் குறிப்பிட்டார்.