தற்போது நிலவும் அதிக உஷ்ணத்துடனான வானிலை காரணமாக பாடசாலை மாணவர்கள் நோய்க்குள்ளாகும் நிலைமை அதிகரித்துள்ளதாக பொரளை சீமாட்டி ரிஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் சிறுவர் நோய்கள் தொடர்பான விசேட வைத்தியர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார்.
இந்த நிலைமையை தவிர்ப்பதற்கு அவசியமான நடவடிக்கைகளை எடுக்குமாறு அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
இதனிடையே, அதிக உஷ்ணத்துடனான வானிலையிலிருந்து பாடசாலை மாணவர்களை பாதுகாப்பது தொடர்பில் கல்வி அமைச்சு விசேட அறிவுறுத்தல் கோவையொன்றை வௌியிட்டுள்ளது.
அதற்கமைய,
* மாணவர்களுக்கு தேவையான அளவு குடிநீர் வழங்கப்பட வேண்டும்
* பாடசாலைகளில் போதுமான அளவு தண்ணீர் காணப்படாத பட்சத்தில் அதற்கான மாற்று ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட வேண்டும்
* மாடிக் கட்டடங்கள் மற்றும் தகரக் கூரையுடன் கூடிய அதிக உஷ்ணம் காணப்படக்கூடிய கட்டடங்களில் உள்ள வகுப்பறைகளை தற்காலிக கட்டடங்களுக்கு மாற்ற வேண்டும்
என கல்வி அமைச்சு விடுத்துள்ள அறிவுறுத்தல் கோவையில் குறிப்பிடப்பட்டுள்ளது