(UTV | கொழும்பு) – ஒரு பெண்ணின் அன்பினால் குடும்பத்தை வெல்ல முடியும். மாளிகாவத்தை இஸ்லாமிக் சென்டரில் நேற்று (14ஆம் திகதி) காதலர் தினமன்று “அவள் முழு குடும்பத்தையும் நேசிக்கிறாள்” என்ற தொனிப்பொருளில் பெண்கள் வலிமையாக நிற்பதை வெளிப்படுத்தும் வகையில் ஆலோசனை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
குடும்பத் தகராறுகள், காதல் உறவுகள் மற்றும் பல்வேறு சமூகப் பிரச்சினைகளினால் அவதியுறும் மாளிகாவத்தை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பெண்களின் மென்மையான உள்ளங்களை வலுப்படுத்தவும், அவர்கள் பாதுகாப்பாக இருப்பதையும், அவர்களை நேசிக்க வேண்டும் என்பதையும் நினைவூட்டும் வகையில், மாளிகாவத்தை பொலிஸ் மற்றும் ஜெனெக்ஸ்ட் இளைஞர் கழகம் இணைந்து இந்த வலுவூட்டல் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தனர்.
Oxford Ceylon Medical Instituteஐ சேர்ந்த ஆலோசனை உளவியலாளர் டாக்டர் பாக்யா அபேசிங்க மற்றும் இலங்கை வங்கியின் ஆதரவுடன் கொழும்பு மத்திய பிரிவு ||| உதவி பொலிஸ் அத்தியட்சகர் திரு. மினுர செனரத், மாளிகாவத்தை பொலிஸ் நிலையப் பிரதான பரிசோதகர் பதியா ஜயசிங்க ஆகியோரின் தலைமையில், Genext இளைஞர் கழகத் தலைவர் அப்துல் ரஹ்மான் அசீம் மற்றும் இளைஞர் கழகக் குழு உறுப்பினர்களின் ஆதரவுடன் சமூகப் பொலிஸாரின் ஆதரவுடன் இந்த நிகழ்ச்சித்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது.
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්