உள்நாடு

இஸ்ரேல் இலங்கைக்கு இடையில் விமான சேவை ஒப்பந்தம் கைச்சாத்து!

(UTV | கொழும்பு) –  இஸ்ரேலுக்கும் இலங்கைக்கும் இடையிலான நேரடி விமான சேவை ஒப்பந்தம் நேற்று கைச்சாத்திடப்பட்டதாக துறைமுகங்கள், கப்பற்றுறை மற்றும் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி ஊடக மையத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு, அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கைப் பணியாளர்கள் வெளிநாடுகளுக்குச் செல்வதில் ஏற்படும் தாமதங்களைத் தடுப்பது இந்த ஒப்பந்தத்தின் முக்கிய நோக்கங்களில் ஒன்றாகும் என அவர் தெரிவித்துள்ளார்.

பல இஸ்ரேலியர்கள் இலங்கைக்கு சுற்றுப்பயணம் செய்ய எதிர்பார்த்துள்ளதாகவும் இஸ்ரேலிய போக்குவரத்து அமைச்சர் எம்மிடம் குறிப்பிட்டார் எனவும் நிமல் சிறிபாலடி சில்வா தெரிவித்தார்.

இதேவேளை, கடந்த ஒக்டோபர் 7ஆம் திகதி ஹமாஸ் இயக்கம் இஸ்ரேலின் பல பகுதிகளில் நடத்திய ரொக்கட் தாக்குதல்களை அடுத்து இங்கு போர் மூண்டது.

கடும் போர் நிலவி வந்தாலும் இலங்கையில் இருந்து அதிகளவான தொழிலாளர்கள் இஸ்ரேலுக்குச் செல்கின்றமையும் குறிப்பிடத்தக்கது.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

ரயில் பருவகால சீட்டு முறை இரத்து – போக்குவரத்து அமைச்சு.

நிதியுதவியின் கீழ் நவீன ரயில் பெட்டிகள்

சர்வதேச நாணய நிதியத்தின் தாளத்திற்கு ஆடும் அரசாங்கம் இருப்பதில் அர்த்தமில்லை – சஜித் பிரேமதாச