உள்நாடு

கிராம உத்தியோகத்தர் ஆட்சேர்ப்பு நேர்முகத் தேர்வுகள் அடுத்த வாரம்

(UTV | கொழும்பு) –  புதிதாக கிராம உத்தியோகத்தர்களை சேவையில் இணைத்துக் கொள்வதற்கான நேர்முகத் தேர்வுகள் அடுத்த வாரம் ஆரம்பமாகவுள்ளதாக உள்நாட்டு அலுவல்கள் இராஜாங்க அமைச்சு தெரிவித்துள்ளது.

அதற்கமைய, 2100 கிராம உத்தியோகத்தர்கள் புதிதாக சேவையில் இணைத்துக் கொள்ளப்படவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் அஷோக பிரியந்த தெரிவித்துள்ளார்.

கிராம உத்தியோகத்தர்களை இணைத்துக்கொள்வது தொடர்பில் அண்மையில் நடைபெற்ற போட்டி பரீட்சையின் பெறுபேறுகளுக்கு அமைய நேர்முகத் தேர்வுகளுக்கான அழைப்பு கடிதங்கள் அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் கூறியுள்ளார்.

நாட்டில் தற்போது சுமார் 2,800 கிராம உத்தியோகத்தர்களுக்கான வெற்றிடம் நிலவுகின்றது.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

SJBயில் UNP காரர்கள் இல்லை: ரணில்

மாணவ பிக்குகளுக்கு பாலியல் வன்கொடுமை பொலிஸில் முறைப்பாடு

 சீ ஷெல்ஸ்- இலங்கைக்கு இடையில் நேரடி விமான சேவை