உள்நாடு

மீகொடை துப்பாக்கி சூட்டு சம்பவம்- ஐந்து உத்தியோகத்தர்கள் இடமாற்றம்!

(UTV | கொழும்பு) –  மீகொடை பொருளாதார மத்திய நிலையத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தின் பின்னர், அந்த நிலையத்தில் அமைந்துள்ள காவலரணின் பொறுப்பதிகாரி உட்பட ஐந்து உத்தியோகத்தர்கள் உடனடியாக அமுலாகும் வகையில் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்

மீகொடை பொருளாதார மத்திய நிலையத்துக்குள் பிரவேசித்த இருவர் நேற்று அதிகாலை அங்குள்ள வர்த்தக நிலையொன்றில் காசாளராக பணியாற்றிய யுவதியொருவர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தி 45,000 ரூபா பெறுமதியான பணத்தை கொள்ளையிட்டுச் சென்றுள்ளனர்

இந்த சம்பவத்தையடுத்து குறித்த பொருளாதார மத்திய நிலையத்தின் வர்த்தகர்கள் தமக்கு பாதுகாப்பில்லை எனக் கூறி அங்குள்ள வர்த்தக நிலையங்களை மூடுவதற்கு நடவடிக்கை எடுத்தனர்.

எவ்வாறாயினும், மீகொடை பொருளாதார மத்திய நிலையத்தின் பாதுகாப்பை உறுதி செய்வதாக பொலிஸார் வழங்கிய உறுதிமொழியின் அடிப்படையில் மீண்டும் குறித்த வர்த்தக நிலையங்களை திறப்பதற்கு தீர்மானித்துள்ளதாக பொருளாதார மத்திய நிலையத்தின் வர்த்தக சங்கத்தின் செயலாளர் சமிந்த ரோஹன குமார தெரிவித்துள்ளார்.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

இவ்வாண்டு ஆயிரத்துக்கும் மேற்பட்ட பட்டதாரிகளை வெளியேற்றிய ஐ டி எம் என் சி சர்வதேச கல்விநிறுவனம்!

முன்னாள் சபாநாயகரின் இறுதிக்கிரியைகள் இன்று

அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தினர் இன்று தொழிற்சங்க நடவடிக்கையில்