(UTV | கொழும்பு) –
ஹமாஸுக்கு ஆதரவு அளித்து வரும் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் குழு, செங்கடல் வழியாக இஸ்ரேல் மற்றும் இஸ்ரேலின் ஆதரவு நாடுகளுக்கு செல்லும் சரக்கு கப்பல்களை குறிவைத்து ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.
இத்தாக்குதலுக்கு பதிலடியாக, ஏமனில் உள்ள ஹவுதி கிளர்ச்சியாளர்களின் நிலைகளை குறிவைத்து அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து சமீபத்தில் அதிரடியாக வான்வழி தாக்குதல் நடத்தி வருகிறது. இத்தாக்குதலால் மத்திய கிழக்கு பகுதியில் பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது.
இதனிடையே, ஜோர்டான் நாட்டில் உள்ள அமெரிக்க படைத்தளம் மீது கடந்த மாதம் ஆளில்லா விமானம் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டது. சிரியாவின் எல்லை அருகே அமைந்துள்ள படைத்தளம் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் அமெரிக்க இராணுவ வீரர்கள் 3 பேர் உயிரிழந்தனர். மேலும், 40 பேர் படுகாயமடைந்தனர். இந்த தாக்குதலை சிரியாவில் செயல்பட்டுவரும் ஈரான் ஆதரவு கிளர்ச்சி குழுக்கள் நடத்தியதாக அமெரிக்கா குற்றஞ்சாட்டியது.
இந்நிலையில், ஈராக், சிரியா மீது அமெரிக்கா நேற்று வான்வழி தாக்குதல் நடத்தியுள்ளது. ஈராக், சிரியாவில் செயல்பட்டுவரும் ஈரான் புரட்சிப்படையின் ஆதரவு கிளர்ச்சி குழுக்கள் மீது இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. 85 இலக்குகள் மீது 125 முறை தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. சிரியா, ஈராக்கில் செயல்பட்டுவரும் ஈரான் ஆதரவு கிளர்ச்சியாளர்கள் குழுக்களின் கட்டுப்பாட்டு மையங்கள், ரொக்கெட்டுகள், ஏவுகணைகள், ஆளில்லா விமானங்கள், ஆயுத சேமிப்பு கிடங்குகளை குறிவைத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්