உள்நாடு

உலக வங்கியின் உணவுத் திட்டத்தின் கீழ் விவசாய தொழில் உபகரணங்கள் வழங்கி வைப்பு!

(UTV | கொழும்பு) –

மட்டக்களப்பு மாவட்டத்தில் பின்தங்கிய கிராம பகுதிகளில் கடந்த அடை மழையினால் பாதிக்கப்பட்ட. மக்களின் வாழ்வாதாரத்தை கட்டி எழுப்பு முகமாக வவுனதீவு பிரதேச செயலகப் பிரிவில் உள்ள தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு உலக வங்கியின் உணவுத் திட்டத்தின் கீழ் விவசாய தொழில் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு வவுனதீவு பிரதேச செயலாளர் திருமதி நமசிவாயம் சத்தியானநந்தி தலைமையில் இன்று பிற்பகல் பிரதேச செயலக வளாகத்தில் இடம் பெற்றது.

 

வவுனதீவு பிரதேச செயலக உதவி திட்டமிடல் பணிப்பாளர் எஸ் சபேசன் தலைமையில் இடம்பெற்ற நிகழ்விற்கு பிரதம அதிதியாக ராஜாங்க அமைச்சர் சீ.சந்திரகாந்தன் பிரதம அதிதியாக கலந்து கொண்டு தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு 6 லட்சம் ரூபாய் பெறுமதியான உபகரணங்களை வழங்கி வைத்தார்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் பின்தங்கிய பிரதேச மக்களின் போஷாக்கினை வலுப்படுத்து முகமாக வாழ்வாதார திட்டங்களை வழங்கிய ஜனாதிபதிக்கு தமது நன்றிகளைத் தெரிவிப்பதாகவும் இதற்கான பயிற்சிகள் அரசாங்கத்தி னால் வழங்கப்பட உள்ளது இதை வெற்றிகரமாக முன்னெடுக்க பயனாளிகள் திறம்பட செயல்பட வேண்டும் என இந்நிகழ்வில் உரையாற்றிய மாவட்ட அரசாங்க அதிபர் இவ்வாறு கருத்து தெரிவித்தார்.

இவ் நிகழ்விற்கு மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஜே ஜே முரளிதரன் மற்றும் வவுனதீவு பிரதேச உதவி பிரதேச செயலாளர் மட்டக்களப்பு மாவட்ட திட்டமிடல் பிரதிப் பணிப்பாளர் எஸ். நிர்மல்ராஜ் பிரதேச செயலக ஊழியர்கள் பயனாளிகல் என பலரும் நிகழ்வில் கலந்து கொண்டார்கள்.

     

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

“எதிர்க்கட்சி தலைவராக நாமல்?”

கொவிட் தொற்றாளர்களை வீட்டில் வைத்து கண்காணிக்கும் நடவடிக்கை ஆரம்பம்

தனிமைப்படுத்தப்பட்ட மற்றுமொரு பகுதி விடுவிப்பு