(UTV | கொழும்பு) –
இந்திய கிரிக்கெட் வீரர் மயங்க் அகர்வால் விமானத்தில் குடிநீருக்கு பதிலாக அசிட் அருந்தி, வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
திரிபுரா மாநிலத்தில் ரஞ்சி ட்ராபி தொடரில் பங்கேற்று விட்டு, அகர்தலாவில் இருந்து சூரத் செல்ல சக வீரர்களுடன் விமானம் ஏறிய மயங் அகர்வால், விமான பயணத்தின் போது குடிநீர் கேட்டுள்ளார். அவருக்கு குடிநீருக்கு பதிலாக வேறு ஒரு போத்தலை மாற்றி விமான ஊழியர் ஒருவர் கொடுத்துள்ளார். அந்த போத்தலில் அசிட் அல்லது உடலுக்கு பாதகம் விளைவிக்கும் கடுமையான வேதிப் பொருள் இருந்ததாக கூறப்படுகிறது. அதை குடித்த உடன் வாயின் உட்பகுதி எரிந்ததால் மயங்க் அகர்வால் அதை துப்பினார்.
எனினும், அவர் அதன் பின் வலியில் துடித்து மயக்க நிலைக்கு சென்றதால் உடனடியாக விமானத்தில் இருந்து இறக்கப்பட்டு, வைத்தியசாலைக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளார். அங்கே அவருக்கு ஐசியூவில் சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது.
அந்தப் போத்தலை பொலிஸார் கைப்பற்றி இருப்பதாகவும், அது எப்படி விமானத்துக்குள் வந்தது, யார் அதை குடிநீர் வைக்கும் இடத்தில் வைத்தது, எப்படி அது என்ன போத்தல் என்றே தெரியாமல் மயங்க் அகர்வாலிடம் கொடுக்கப்பட்டது என விமான ஊழியர்களிடம் கடும் விசாரணை நடந்து வருகிறது.
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්