உள்நாடு

தனியார் வகுப்புக்கு செல்ல பணம் இல்லாததால் உயிரை மாய்த்த சிறுமி!

(UTV | கொழும்பு) –

பதுளை – புவக்கொடமுல்ல பிரதேசத்தில் வசிக்கும் பாடசாலை மாணவி ஒருவர் இரத்த அழுத்த மருந்தை அளவுக்கு அதிகமாக உட்கொண்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். தரம் 11 இல் கல்வி கற்கும் ஆயிஷா பர்வீன் என்ற மாணவியே தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

அவர் தனது தாயாரிடம் கணித வகுப்புகளுக்கு பணம் கேட்டுள்ள நிலையில்,அங்கு தனது தந்தை மற்றும் அவரது தாயாருக்கு இடையே ஏற்பட்ட வாக்குவாதத்தால் மனமுடைந்த மாணவி மருந்து அருந்தி இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. பின்னர் அவரை உடனடியாக பதுளை பொது வைத்தியசாலைக்கு கொண்டு சென்றுள்ள நிலையில் மாணவி இரத்த அழுத்த மருந்தை அதிகளவு உட்கொண்டுள்ளதால் உயிரிழந்துள்ளதாக வைத்தியர்கள் தெரிவித்தனர்.

 

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

தமிழ் தலைவர்கள் ஜனாதிபதிக்கு தனது ஒத்துழைப்பை வழங்க வேண்டும் – வியாழேந்திரன்.

கறுப்பு பூஞ்சை தொற்றுக்குள்ளான கொரோனா நோயாளர்கள் அடையாளம்

வௌ்ளத்தில் சிக்கிய நபரின் சடலம் 4 நாட்களின் பின் மீட்பு

editor