உள்நாடு

ஆபத்தான நிலையில் உள்ள பாரிய கட்டடம்!

(UTV | கொழும்பு) –

கொழும்பு கோட்டையில் உள்ள க்ரிஷ் கோபுரம் எனப்படும் உயரிய கட்டடம் ஆபத்தான நிலையில் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சுமார் 50 மாடிகளுக்கு மேல் உள்ள இந்த கட்டடம் ஓராண்டுக்கு மேலாக கைவிடப்பட்ட நிலையில் உள்ளதோடு அதன் மேற்கூரையில் உள்ள கிரேன் பயன்படுத்தப்படாமல் பாதிப்படைந்து வருவதாக குறிப்பிடப்படுகிறது.

கொழும்பு கோட்டை வீதியிலுள்ள பரபரப்பான போக்குவரத்திற்கும் அருகிலுள்ள கட்டடங்களுக்கும் கூட இது பெரும் அனர்த்தத்தை உருவாக்கும் என பலர் கூறுகின்றனர். இதேவேளை இந்த கட்டட வளாகத்தில் மழையினால் தேங்கி நிற்கும் நீர் காரணமாக டெங்கு நுளம்பு பரவுவதற்கான அச்சுறுத்தலும் விடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் சம்பந்தப்பட்ட அதிகாரி ஒருவர் இன்னும் இந்த திட்டம் இருப்பதாகவும், அதன் எதிர்கால திட்டங்கள் குறித்து விரைவில் அறிவிப்பு வெளியிடப்படும் என்றும் கூறினார்.

 

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

இதுவரையில் 2,907 பேர் பூரண குணம்

இலங்கையில் மேலும் 22 பேருக்கு கொரோனா

கொழும்பு சர்வதேச புத்தக கண்காட்சி 2020