உள்நாடு

உயர்தர மாணவர்களுக்கான முக்கிய அறிவிப்பு!

(UTV | கொழும்பு) –

ரத்துச்செய்யப்பட்ட உயர்தர விவசாய விஞ்ஞான வினாத்தாளுக்குப் பதிலாக நடைபெறவுள்ள புதிய பரீட்சைக்குத் தோற்றுவதற்கான அனுமதி அட்டையை www.doenets.lk என்ற இணையத்தளத்திற்குச் பிரவேசித்து பெற்றுக்கொள்ள முடியும் என பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

பரீட்சார்த்திகளுக்கான அனுமதி அட்டை ஏற்கனவே வழங்கப்பட்டுள்ளதாகவும், அது கிடைக்காத பட்சத்தில் இணையத்தளத்திற்கு பிரவேசித்து அனுமதி அட்டையை பெற்றுக்கொள்ள முடியும் எனவும் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
எவ்வாறாயினும், பரீட்சார்த்திகள் இரத்து செய்யப்பட்ட பரீட்சைக்கு தோற்றிய அதே பரீட்சை நிலையத்தில் புதிய வினாத்தாளுக்கு தோற்றினால், அனுமதி அட்டை தேவையில்லை என்றும் பரீட்சை திணைக்களம் தெரிவித்துள்ளது.

இந்த ஆண்டு உயர்தர விவசாய வினாத்தாள் கசிந்துள்ளதாக தெரியவந்ததையடுத்து, வினாத்தாளை முழுமையாக ரத்து செய்ய பரீட்சை திணைக்களம் நடவடிக்கை எடுத்தது. அதன்படி அந்த பாடத்தை மட்டும் பெப்ரவரி மாதம் முதலாம் திகதி விசேட பரீட்சையாக நடத்த திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.

விவசாய வினாத்தாளின் இரண்டாம் பகுதி காலை 08.30 மணி முதல் 11.40 மணி வரையிலும், முதல் பகுதி பிற்பகல் 01 மணி முதல் 3 மணி வரையிலும் நடைபெறும். மேலதிக தகவல்களை பரீட்சை திணைக்களத்துடன் தொடர்பு கொண்டு பெற்றுக்கொள்ள முடியும் என ஆணையாளர் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

சதோசவுக்கு மதுபான உரிமம்

கார்த்தினால் ஆண்டகையினை திருப்திப்படுத்தவா ரிஷாதின் கைது? [VIDEO]

பாராளுமன்ற அமர்வுகள் இன்று முதல் வெள்ளி வரையில்