உள்நாடு

பொதுஜன பெரமுன உறுப்பினர் மீது தாக்குதல் – ஒருவர் கைது

(UTV | கொழும்பு) –

பொதுஜன பெரமுனவின் மஹியங்கனை உள்ளுராட்சி சபையின் முன்னாள் உறுப்பினர் ஒருவரை தலைக்கவசத்தால் தாக்கி பலத்த காயம் ஏற்படுத்திய சந்தேகத்தின் பேரில் இளைஞர் ஒருவர் இன்று கைது செய்யப்பட்டதாக கந்தகெட்டிய பொலிஸார் தெரிவித்தனர்.

மஹியங்கனை தபகொல்ல பிரதேசத்தைச் சேர்ந்த 42 வயதுடைய மஹியங்கனை உள்ளுராட்சி மன்ற முன்னாள் உறுப்பினர் தலையில் தலைக்கவசத்தால் தாக்கியதில் காயமடைந்து கந்தகெட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் பதுளை போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கந்தகெட்டிய, பதுலுஓயா பகுதியைச் சேர்ந்த 29 வயதுடைய ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். முன்னாள் உள்ளுராட்சி மன்ற உறுப்பினர் கந்தகெட்டிய சந்தியில்ருந்து கந்தகெட்டிய நகரை நோக்கி இரவு மோட்டார் சைக்கிளில் பயணித்த போது பின்னால் மோட்டார் சைக்கிளில் வந்த சந்தேக நபர் சபை உறுப்பினரின் மோட்டார் சைக்கிளை முந்திச் சென்று ஹெபரகொட வளைவுக்கு அருகில் திடீரென வீதியைக் கடந்து சபை உறுப்பினர் பயணித்த மோட்டார் சைக்கிளை நிறுத்தியுள்ளது

இருவருக்குமிடையில் வாக்குவாதம் மூண்டதையடுத்து சந்தேக நபர் குறித்த உறுப்பினரின் தலையில் தலைக்கவசத்தால் தாக்கிவிட்டு தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

கொரோனா நோயாளர்களின் தற்போதைய நிலவரம்

தரம் 5 – பரீட்சை மீள் திருத்த முடிவுகள் வெளியானது

வேலைவாய்ப்பு பெற்றுத் தருவதாகக் கூறி மோசடி செய்தவர் கைது!