(UTV | கொழும்பு) –
துருக்கியில் இன்று காலை 5.19 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5 என்ற அளவில் பதிவாகி இருப்பதாக ஜெர்மன் புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கத்தின் மையம் தரைமட்டத்தில் இருந்து 10 கிமீ ஆழத்தில் அமைந்திருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதங்களின் விவரங்கள் வெளியாகாத நிலையில், உயிரிழப்புகள் எதுவும் ஏற்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக துருக்கியில் கடந்த ஆண்டு பெப்ரவரி மாதம் ஏற்பட்ட தொடர் நிலநடுக்கங்களால் சுமார் 50 ஆயிரத்துக்கும் அதிகமான மக்கள் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්