உலகம்

இரு நாடுகள் செல்வதற்கு இனி விசா தேவையில்லை!

(UTV | கொழும்பு) –

சீனர்கள் அதிகளவில் வசிக்கும் நாடுகளில் ஒன்று சிங்கப்பூர். இந்த இரு நாடுகளும் நீண்ட காலமாகவே நெருங்கிய நட்பு நாடுகளாக உள்ளன. இந்நிலையில் தற்போது இரு நாடுகளும் தங்களது விசா நடைமுறையில் மாற்றங்களை கொண்டு வருவதற்காக ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன. அதன்படி இரு நாடுகள் இடையே செல்வதற்கு இனி விசா தேவையில்லை.

சிங்கப்பூர் மற்றும் சீன மக்கள் தங்களது சாதாரண கடவுச்சீட்டு மூலம் பரஸ்பர நாடுகளில் 30 நாட்கள் வரை தங்கிக்கொள்ளலாம். இது அடுத்த மாதம் 9ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன்மூலம் இரு நாடுகளிடையே மக்கள் பரிமாற்றம் மற்றும் உறவுகள் மேலும் மேம்படும் என சீன வெளியுறவு அமைச்சக செய்தித்தொடர்பாளர் வாங் வென்பின் கூறினார்.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

5 ஜி ரோபோக்களுடன் கொரோனா வைரஸ் வைத்தியசாலை

நாட்டு மக்களுக்கு உரை நிகழ்த்தப் போவதாக ஜோ பைடன் அறிவிப்பு

தென்கொரியாவிடம் மன்னிப்பு கேட்ட கிம் ஜாங் உன்