உலகம்

சவுதியில் திறக்கப்பட்ட மதுபானக்கடை!

(UTV | கொழும்பு) –

சவுதியில் மதுபானக்கடை திறக்கப்பட்டுள்ளது என வெளிநாட்டு செய்தி சேவைகள் செய்தி வெளியிட்டுள்ளன. முஸ்லிம் அல்லாத வெளிநாட்டு தூதர்களுக்கு மட்டுமே மதுபானக்கடை திறக்கப்பட்டுள்ளது, சவுதிகளுக்கு 70 ஆண்டுகளுக்கு பிறகு மதுபானக்கடை திறக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

சவூதி அரேபியாவில் மதுவுக்கு 1950 ஆம் ஆண்டு தடை விதிக்கப்பட்டது. அப்போது சவுதி அரேபியாவின் மன்னராக அப்துல் அஜீஸ் இருந்தார். மன்னரின் மகன் இளவரசர் மிஷாரி மது அருந்திவிட்டு, ஜெட்டாவில் பிரித்தானிய துணைத் தூதராக இருந்த சிரில் ஒஸ்மானை சுட்டுக் கொன்றதை அடுத்து மதுவிலக்கு அமல்படுத்தப்பட்டது.

தற்போது பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் சவுதி அரேபியாவை சுற்றுலா மற்றும் வணிக தலமாக மாற்ற நடவடிக்கை எடுத்துள்ளார். இதனு​டன் இணைந்து மதுபானக் கடை திறக்கப்பட்டது.

 

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

INDIA ELECTION 2024 : வெல்லப்போவது யார்? இந்தியா கட்சிகள் பெற்ற இடங்களின் விபரம்

இலங்கையின் சுதந்திரதினத்தன்று – பிரிட்டனில் மாபெரும் கண்டனப் பேரணி

காங்கோ குடியரசின் முன்னாள் அதிபர் கொரோனா வைரஸால் பலி