உள்நாடு

இணையப் பாதுகாப்புச் சட்டமூலம் குறித்த விவாதம் நாளை நாடாளுமன்றத்தில்!

(UTV | கொழும்பு) –

உத்தேச நிகழ்நிலைக் காப்புச் சட்டமூலம் (இணையப் பாதுகாப்புச் சட்டமூலம்) நாளை மற்றும் நாளை மறுதினம் நாடாளுமன்றத்தில் விவாதத்திற்கு உட்படுத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இந்த புதிய சட்டமூலத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து தொழில்முறை ஊடகவியலாளர்களின் ஒன்றியம் மற்றும் சுதந்திர பத்திரிகை இயக்கம் ஆகியன கூட்டாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளன.

மக்களின் பேச்சு மற்றும் கருத்துச் சுதந்திரத்தைக் கட்டுப்படுத்தி ஜனநாயக உரிமைகளை நசுக்கும் அரசாங்கத்தின் முயற்சிகளை கூட்டாக தோற்கடிக்க வேண்டும் என குறித்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. நடைபெறவுள்ள தேர்தல்களில் வெற்றியீட்டுவதற்கான இலக்குகளை எட்டுவதற்காகவே அரசாங்கம் ஒடுக்குமுறைச் சட்டமூலங்களை நிறைவேற்ற முற்படுவதாக தொழில்முறை ஊடகவியலாளர்களின் ஒன்றியத்தின் தலைவர் துமிந்த சம்பத் சுட்டிக்காட்டியுள்ளார்.

அத்துடன் இந்த சட்டமூலத்திற்கு சுதந்திர ஊடக இயக்கத்தின் அழைப்பாளர் ஹனா இப்ராஹிமும் தமது எதிர்ப்பினை அறிக்கை ஊடாக வெளியிட்டுள்ளார். இதேவேளை உத்தேச நிகழ்நிலை காப்பு சட்டமூலம் நாளை மற்றும் நாளை மறுதினம் நாடாளுமன்றத்தில் விவாதத்திற்கு உட்படுத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சட்டமூலம் பரிசீலிக்கப்படும் போது, அதில் பல திருத்தங்கள் உள்ளடக்கப்படும் என நாடாளுமன்ற வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
பொது பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் அண்மையில் இந்த சட்டமூலத்தை நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

 

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

நாடு திறந்திருக்க கொரோனாவை கட்டுப்படுத்துவதே அரசின் தீர்மானம்

புதிய அமைச்சரவை

சம்பள அதிகரிப்பினை கோரி மீண்டும் களமிறங்கும் ஆசிரியர் சங்கம்