உள்நாடு

கிளிநொச்சியில் மீட்கப்பட்ட இளைஞனின் சடலம்!

(UTV | கொழும்பு) –

கிளிநொச்சி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பன்னங்கண்டி அ.த.க பாடசாலைக்கு முன்பாக உள்ள கழிவு வாய்க்கால் ஒன்றிலேயே இவ்வாறு அடையாளம் காணப்பட்டுள்ளார்.குறித்த நபர் மது போதையில் இருந்த நிலையில் நேற்று மாலை 7 மணியளவில் மக்களால் அவதானிக்கப்பட்டுள்ளார். இன்று காலை குறித்த நபர் சடலமாக காணப்படுவது அவதானிக்கப்பட்டு பொலிசாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது.

குறித்த சம்பவத்தில் மருதநகர் பகுதியைச் சேர்ந்த 33 வயதுடைய ஜெயராம் டினேஸ் எனும் இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் கிளிநொச்சி பொலிசார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். சம்பவ இடத்தில் நீதவான் விசாரணைகளின் பின்னர் குற்றதடுப்பு பொலிசார் விசாரணையின் பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படவுள்ளது. அண்மை நாட்களாக இளைஞர்களின் உயிர் இழப்புக்கள் அதிகரித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

   

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

100 மி.மீ க்கும் அதிகமான கனமழைக்கு வாய்ப்பு

editor

இலங்கைக்கு எதிராக ஜெனீவா தீர்மானம் நிறைவேறியது

இலங்கை மின்சார சபையின் மறுசீரமைப்பு பணிகளை ஆரம்பிக்க அமைச்சரவை ஒப்புதல்