(UTV | கொழும்பு) –
மின்சார சபையின் மறுசீரமைப்புக்கு எதிர்ப்புத் தெரிவித்த மின்சார ஊழியர்கள் சிலரின் சேவை இடைநிறுத்தப்பட்டுள்ளன. அண்மையில் நடைபெற்ற போராட்டத்தின் போது பண கவுண்டரை மூடி மின் கட்டணம் செலுத்துவதற்கு இடையூறு விளைவித்த 15 பண கவுண்டர்கள் (cash counters) பணி இடைநீக்கம் செய்யப்பட்டதாக மின்சார சபை தெரிவித்துள்ளது.
மின்சார சபையை தனியார் மயமாக்கப் போவதாக அண்மையில் அதன் தொழிற்சங்கங்கள் எதிர்ப்புப் பிரச்சாரத்தை முன்னெடுத்திருந்தன. இதன்படி, மின்சார சபையின் நிர்வாகத்தால் வழங்கப்பட்ட வழிகாட்டல்களை மீறும் வகையில் சேவைகளுக்கு இடையூறு விளைவிக்கும் ஊழியர்களை பணி இடைநீக்கம் செய்து உரிய ஒழுக்காற்று நடவடிக்கைகளை எடுக்குமாறு மின்சக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர இலங்கை மின்சார சபை நிர்வாகத்திற்கு பணிப்புரை விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්