உள்நாடு

அரச ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு குறித்து வௌியான அறிவிப்பு!

(UTV | கொழும்பு) –

2024 வரவு செலவு திட்டத்தில் முன்மொழியப்பட்ட 10,000 ரூபா சம்பள அதிகரிப்பின் முதற்கட்டமாக 5,000 ரூபா கொடுப்பனவு தொடர்பான பணத்தை திறைசேரி விடுவித்துள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.

அரசாங்க ஊழியர்களின் சம்பளத்திற்காக தற்போது சுமார் 95 பில்லியன் ரூபா செலவிடப்படுவதாக அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஜனவரி மாதம் முதல் இந்த பணம் மேலும் 7 பில்லியன் ரூபாவால் அதிகரிக்கும் எனவும், ஏப்ரல் மாதம் முதல் 10,000 ரூபா சம்பள அதிகரிப்புக்கு உத்தேசிக்கப்பட்டுள்ளதன் பின்னர் அரசாங்கம் 14 பில்லியன் ரூபாவை மேலதிகமாக செலவிடவுள்ளதாகவும் இராஜாங்க அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

பணம் அச்சடிப்பதும் கடன் வாங்குவதும் நிறுத்தப்பட்டுள்ள சூழ்நிலையில், செலவு மேலாண்மை மூலம் மட்டுமே உரிய தொகையை சேமிக்க வேண்டும் என இராஜாங்க அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

 

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

போதைப் பொருள் பாவனையை கட்டுப்படுத்தக் கோரி – வவுனியாவில் ஆர்ப்பாட்டம்.

ரணிலுக்கும், மொட்டு எம்பிக்களுக்கும் முக்கிய சந்திப்பு!

அனர்த்தத்தை குறைப்பதற்கு ஒத்துழைப்பு வழங்குமாறு வலியுறுத்தல்