வகைப்படுத்தப்படாத

அக்குரஸ்ஸயில் பேரூந்துகள் இரண்டு நேருக்கு நேர் மோதி பயங்கர விபத்து – 52 பேர் காயம்

(UDHAYAM, COLOMBO) – அக்குரஸ்ஸ – கியாடுவ பிரதேசத்தில் இடம்பெற்ற பேரூந்து விபத்தில் 52 பேர் காயமடைந்துள்ளனர்.

இன்று முற்பகல் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேரூந்தொன்றும் மற்றும் தனியார் பேரூந்தொன்றும் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக காவற்துறை தெரிவித்தது.

விபத்தில் காயமடைந்தவர்கள் அக்குரஸ்ஸ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் , அதில் பலத்த காயங்களுக்கு உள்ளான 6 பேர் மாத்தறை மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

இந்த விபத்தில் 31 பெண்களும் மற்றும் 21 ஆண்களும் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Related posts

2019 ක්‍රිකට් ලෝක කුසලානය එංගලන්තයට

කේරල ගංජා කිලෝ 200ක් සමඟ අයෙක් අත්අඩංගුවට’

மெக்சிகோ துப்பாக்கிச் சூட்டில் பொலிசார் 14 பேர் உயிரிழப்பு