உள்நாடு

பல்கலைக்கழக மாணவி சிகிச்சைப் பலனின்றி உயிரிழப்பு!

(UTV | கொழும்பு) –

டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டு ஹொரணை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த 23 வயதுடைய பல்கலைக்கழக மாணவி ஒருவர் நேற்று உயிரிழந்ததாக வைத்தியசாலை பணிப்பாளர், விசேட வைத்திய நிபுணர் அயந்தி ஜயவர்தன தெரிவித்துள்ளார்.

போருவதண்ட, மாப்புட்டுகல , மானெல் உயன பிரதேசத்தை சேர்ந்த கொழும்பு கற்புல அரங்கேற்றக் கலைகள் பல்கலைக்கழகத்தில் முதலாம் ஆண்டில் கல்வி கற்று வந்த ஹாசினி பாக்யா என்ற மாணவியே உயிரிழந்தார்.

காய்ச்சல் காரணமாக கடந்த 5ஆம் திகதி ஹொரணை ஆதார வைத்தியசாலையில் அவர் அனுமதிக்கப்பட்டார்.அதன்பின், கடந்த 11ம் திகதி தீவிர சிகிச்சை பிரிவுக்கு மாற்றப்பட்ட நிலையில், அவர் சுயநினைவை இழந்துவிட்டதாக பெற்றோர் தெரிவித்தனர்.மாணவியை பல்வேறு பரிசோதனைகளுக்கு உட்படுத்திய மருத்துவர்கள் அவருக்கு டெங்கு காய்ச்சல் இருப்பதை உறுதி செய்தனர். இந்நிலையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த மாணவி நேற்று உயிரிழந்தார்.

 

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

மரணத்தின் பின்னர் PCR பரிசோதனைகள் கட்டாயமில்லை

O/L பரீட்சை பெறுபேறுகள் வெளியாகியுள்ளது

editor

அத்தியாவசிய சேவைகளாகக் குறிப்பிடும் விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியீடு