(UTV | கொழும்பு) –
இராணுவ பொறியியல் படையணியின் மேஜர் ஜெனரல் கே.ஏ.என் ரசிக்க குமார இராணுவ ஊடக மற்றும் உளவியல் செயற்பாட்டு பணிப்பகத்தின் புதிய பணிப்பாளர் நாயகமாக நியமிக்கப்பட்டுள்ளார்.
மேஜர் ஜெனரல் கே.ஏ.என் ரசிக்க குமார 1990இல் இலங்கை இராணுவத்தில் இணைந்து 1991இல் பாகிஸ்தான் இராணுவ கல்வியற் கல்லூரியில் பயின்று இரண்டாம் லெப்டினனாக அதிகாரவாணை பெற்றார்.
அணி தலைவர் பாடநெறி, அதிகாரிகளின் தனிசிறப்பு பாடநெறி, படையணி புலனாய்வு அதிகாரி பாடநெறி, களப் பொறியியலளார் பாடநெறி, படையணி கணக்காளர் பாடநெறி, படையணி நிர்வாக அதிகாரி பாடநெறி, இராணுவக் கட்டளை மற்றும் பணிநிலை பாடநெறி, தேசிய பாதுகாப்பு கல்லூரி கற்கை (தேசிய பாதுகாப்பு மற்றும் மூலோபாய ஆய்வுகள்), இளம் அதிகாரிகள் பாடநெறி – இந்தியா, போர் பொறியியல் பயிற்றுவிப்பாளர் பாடநெறி – இந்தியா, இராணுவ கட்டளை மற்றும் பணிநிலை பாடநெறி – சீனா மற்றும் கண்ணி வெடி மற்றும் வெடி பொறியியல் பாடநெறி – சீனா. ஆகிய பல்வேறு பாடநெறிகளை பயின்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්