(UTV | கொழும்பு) –
ஆப்கானிஸ்தான் நாட்டில் இன்று 6.4 ரிக்டர் அளவில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தின் அதிர்வு பாகிஸ்தான் மற்றும் இந்தியாவிலும் எதிரொலித்தது.
பாகிஸ்தான் நாட்டின் லாகூர், இஸ்லாமாபாத், கைபர் பக்துன்க்வா ஆகிய நகரங்களில் நிலஅதிர்வு அதிக அளவில் உணரப்பட்டுள்ளது. இதனால் இங்குள்ள மக்கள் அச்சத்துடன் வீட்டில் இருந்து வெளியேறினர்.
அதேபோல் இந்தியாவில் வட மாநிலங்களிலும் நிலஅதிர்வு உணரப்பட்டது. இந்த நிலஅதிர்வால் பாதிப்பு ஏற்பட்டதா? என்பது குறித்து தகவல் வெளியாகவில்லை.
கடுமையான நிலநடுக்கத்தால் ஆப்கானிஸ்தானில் ஏற்பட்டுள்ள சேதம் குறித்து உடனடி தகவல் ஏதும் வெளியாகவில்லை. ஆப்கானிஸ்தானில் கடந்த வருடம் ஒக்டோபர் மாதம் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. 3 மாதத்திற்குள் மீண்டும் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්