உள்நாடு

நாட்டில் கடுமையாகும் சட்டம்!

(UTV | கொழும்பு) –

மத போதனைகளை திரிபுபடுத்தும் மற்றும் சமூக பதற்றத்தை ஏற்படுத்தும் செயல்களை தடுக்கவும் அகற்றவும் சட்டத்தை கடுமையாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதற்கமைய, புதிய சட்டங்களை இயற்றுவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருவதாக புத்தசாசன மற்றும் மத விவகார அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க தெரிவித்துள்ளார்.

மத உண்மைகளை திரித்து நபர் ஒருவர் செய்த பிரசங்கங்களை தொடர்ந்து தானும் அவரைப் பின்பற்றியவர்களும் உயிரை மாய்த்துக் கொண்டதாக அமைச்சர் கூறினார்.

சமூகத்தை சீர்குலைக்கும் நபர்களின் மத நம்பிக்கைகள் குறித்து ஆராய அமைச்சரவை குழுவொன்றை நியமித்துள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். நாட்டின் சட்ட கட்டமைப்பிற்குள் எல்லையோர மக்கள் தமது மதத்தை கடைப்பிடிக்கும் சூழலை உருவாக்குவதற்கு தேவையான செயற்பாடுகள் முன்னெடுக்கப்படும் எனவும் அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க தெரிவித்துள்ளார்.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

கம்மன்பிலவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை – விவாத திகதி அடுத்தவாரம்

சகல அரச ஊழியர்களுக்கும் இன்று கடமைக்கு

பொலிஸ் உத்தியோகத்தர்கள் 14 பேருக்கு இடமாற்றம்