உள்நாடு

புதுவருடத்தில் 25,000 பயணிகள் நாட்டுக்கு வருகை!

(UTV | கொழும்பு) –

இந்த வருடத்தின் முதல் 04 நாட்களில் மாத்திரம் 25,000 இற்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருகை தந்துள்ளனர்.
கடந்த ஜனவரி மாதம் முதலாம் திகதி முதல் 4 ஆம் திகதி வரையில் மாத்திரம் 25,619 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.

அதில் அதிகளவான சுற்றுலான பயணிகளான 5,060 பேர், ரஷ்யாவிலிருந்து வந்துள்ளதுடன், 3,333 சுற்றுலாப் பயணிகள் இந்தியாவிலிருந்து வருகை தந்துள்ளனர்.

மேலும், ஜேர்மனி, பிரித்தானியா, அவுஸ்திரேலியா, சீனா, பிரான்ஸ், நெதர்லாந்து மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளில் இருந்தும் அதிகளவான சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.

கடந்த ஆண்டில் மட்டும் 14 லட்சத்து எண்பத்து ஏழாயிரத்து முன்னூற்று மூன்று சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருகை தந்துள்ளதுடன், இந்த ஆண்டு அந்த எண்ணிக்கை 23 லட்சமாக அதிகரிப்பதற்கு எதிர்பார்க்கப்படுகிறது.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

தண்டப்பணம் செலுத்துவதற்கான சலுகை காலம் நீடிப்பு

இலங்கை நிலவரங்கள் குறித்து அமெரிக்கா உன்னிப்பாக அவதானம்

எதிர்க்கட்சிகள் சபாநாயகரிடம் வலியுறுத்தல்!