உள்நாடுசூடான செய்திகள் 1

மொட்டுக்கட்சி ரணிலுக்கே ஆதரவு – இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம!

(UTV | கொழும்பு) – எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க போட்டியிட்டால் அவருக்கு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஆதரவு கிடைக்கும் என இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.

கண்டியில் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போதே இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம இவ்வாறு கூறியுள்ளார்.

‘பொதுஜன பெரமுனவின் பெரும்பான்மையான உறுப்பினர்களின் ஆதரவுடன் ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ளமையால் ஜனாதிபதி தேர்தலில் அவருக்கு ஆதரவளிப்பதில் பிரச்சினை இல்லை.

நாடு தற்போது பொருளாதார ரீதியாக மீண்டு வருகிறது. அதற்கான பெருமை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கே வழங்கப்பட வேண்டும்.’ என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஜனாதிபதித் தேர்தல் வேட்பாளர் தொடர்பில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்குள் பல்வேறு கருத்து முரண்பாடுகள் எழுந்துள்ளன. கட்சியின் சார்பில் ஒருவர் வேட்பாளராக களமிறங்க வேண்டுமென்பதில் ஒருசிலர் உறுதியாக உள்ளனர்.

சிலர் வர்த்தகர் தம்மிக்க பெரேராவை வேட்பாளராக களமிறக்க வேண்டுமென கூறுவதுடன், பெரும்பாலானாவர்கள், தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கே ஆதரவளிக்க வேண்டுமென்ற நிலைப்பாட்டில் உள்ளனர்.

இதேவேளை, ஜனாதிபதித் தேர்தலுக்கான பிரசாரத்தை ஐ.தே.க இம்மாதத்தின் நடுப்பகுதியில் ஆரம்பிக்க உள்ளது. அதன் முதல் பொதுக் கூட்டத்தில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை அக்கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக அறிக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

அரசியல் நெருக்கடிக்கு ஒரே தீர்வு பொதுத் தேர்தலை நடத்துவதேதாகும்

நாளாந்தம் பெறப்படும் கடவுச்சீட்டுக்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு

பல்கலைக்கழகங்களை நவம்பர் மாதம் மீளவும் திறக்க எதிர்பார்ப்பு