உள்நாடு

கடும்போக்குவாத மதங்களை பின்தொடர வேண்டாம், ஞானசார தேரர் எச்சரிக்கை..!

(UTV | கொழும்பு) –    கடும்போக்குவாத மதங்களை பின்தொடர வேண்டாம் என பொதுபல சேனா இயக்கத்தின் பொதுச் செயலாளர் கலகொடத்தே ஞானசார தேரர் கோரியுள்ளார்.

அண்மையில் இலங்கையில் இடம்பெற்ற சில கூட்டுத் தற்கொலைச் சம்பவங்கள் மத போதகர் ஒருவரின் போதனைகளினால் ஏற்பட்டதா என்ற கோணத்தில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

குறித்த கூட்டுத் தற்கொலைச் சம்பவங்கள் தொடர்பில் கருத்து தெரிவிக்கையிலேயே இதனை தெரிவித்துள்ளார்.

மேலும் தெரிவிக்கையில்,

‘உயிரை மாய்த்துக் கொள்வது பாவ செயல் என பௌத்த தர்மத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதற்கு உதவுதலும் பாரிய பாவச் செயல் என பௌத்த தர்மம் கூறுகிறது.

இந்நிலையில், நாம் தர்ம மார்க்க நெறியில் பணிக்க வேண்டும். கடும்போக்குவாத மதங்களை பின்தொடர்ந்து பெறுமதியான உயிர்களை அழித்துக் கொள்ளத் தேவையில்லை.

காளான் முளைப்பது போன்று உருவாகும் மதக் கும்பல்கள் மத போதகர்கள் தொடர்பில், மக்கள் மிகுந்த அவதானத்துடன் இருக்க வேண்டும்’ என்றார்.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

கொரோனா தொற்றாளர் தற்கொலை – 22 ஆக உயர்வு

பாதுகாப்பு பிரதானிகளுடன் ஜனாதிபதி அநுர கலந்துரையாடல்

editor

நாட்டை பொறுப்பேற்க கோட்டாபய அழைத்த போது சஜித் மறுத்தார் – ஜீவன்

editor