உள்நாடு

UTV நடாத்தும் குறுந்திரைப்படப் போட்டி – 2024 || UTV Short Film Competition 2024

(UTV | கொழும்பு) –

🟥 பலரின் வேண்டுகோளுக்கு இணங்க, UTV நடாத்தும் குறுந்திரைப்படப்போட்டியின் இறுதி திகதி பெப்.15ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது!

உங்கள் UTV நடாத்தும் குறுந்திரைப்படப் போட்டி – 2024

குறுந்திரைப்படத்துறையை வளர்ப்பதற்காகவும் இத்துறையில் ஆர்வம் உள்ளோரை ஊக்குவிப்பதற்காகவும் குறுந்திரைப்படப்; போட்டி ஒன்றை UTV நடாத்தவுள்ளது.

போதையின் தாக்கம் என்ற தலைப்பில்
பிரதிபலிப்பனவாக இக் குறுந்திரைப்படத்தினை உருவாக்க வேண்டும்
அனுப்பப்படும் குறுந்திரைப்படங்கள் UTV HD இன் YOUTUBE இல் பதிவிடப்படும். அவை ரசிகர்களினதும் முடிவுக்கு இணங்க முதல் மூன்று இடங்களுக்கு தெரிவாகும் குறுந்திரைப்படங்களுக்கு பெறுமதியான பணப்பரிசுகளும் சான்றிதழ்களும் வழங்கப்படும்.

 

  • முதலாம் இடத்துக்குத் தெரிவாகும் குறுந்திரைப்படத்திற்கு
    ரூபா 100,000 பணப்பரிசும் சான்றிதழும்,
  •  இரண்டாமிடத்துக்கு தெரிவாகும் குறுந் திரைப்படத்திற்கு
    ரூபா 50,000 பணப்பரிசும் சான்றிதழும்,
  •  மூன்றாமிடத்திற்கு தெரிவாகும் குறுந் திரைப்படத்திற்கு
    ரூபா 30,000 பணப்பரிசும் சான்றிதழும் வழங்கப்படுவதோடு
    சிறந்தவை என தெரிவாகும் மேலும் 07 குறுந்திரைப்படங்களுக்கு சிறப்புச் சன்றிதழ்களும் கௌரவங்களும் வழங்கப்படும்.

 

விதிகள்.
01. குறுந்திரைப் படம் உங்களது தொலைபேசி மூலமாகவே அல்லது கமெராக்கள் மூலமாகவே உருவாக்க முடியம்.

02. குறுந்திரைப்படம் 07 நிமிடங்களுக்கு குறைவில்லாததாகவும் 09 நிமிடங்களுக்கு மேற்படாதவைகளாகவும் அமைதல் வேண்டும்.

03. ஏற்கனவே தயாரிக்கப்பட்டு தொலைக்காட்சிகளிலோ, சமூக ஊடகங்களிலோ பகிரப்படாதவையாக அவை அமைந்திருக்க வேண்டும். அவ்வாறு தயாரித்து ஒளிபரப்பப்பட்டது என தெரியவரும் பட்சத்தில் அவை போட்டியிலிருந்து நீக்கப்படும்.

04. காப்புரிமை (Copyright ) கொண்ட பாடல்கள், இசை ஆகியவற்றைப் பயன்படுத்தக் கூடாது.

05. குறுந்திரைப்படங்கள் எதிர்வரும் பெப்ரவரி15 ம் திகதிக்கு முன்னதாக UTVHD.EVENT@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு WeTransfer ஊடாக உங்களது விபரங்களுடன் அனுப்பிவைக்கப்படல் வேண்டும்.

06. விதிகளுக்கு உட்படாத குறுந்திரைப்படங்கள் நிராகரிக்கப்படும்.

UTV நடாத்தும் குறுந்திரைப்பட போட்டியில் பங்குகொண்டு பணப்பரிசையும் கௌரவத்தையும் பெற்றிடுங்கள்!

 

0772772070 WhatsApp

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

நீர் கட்டணங்களை செலுத்த சலுகை காலம்

19 ஆவது திருத்தத்தினை சில திருத்தங்களுடன் உறுதிப்படுத்த பிரதமர் இணக்கம்

ஒரு கோடி ரூபா பெறுமதியான கொக்கேன் போதைப்பொருள் மீட்பு