உள்நாடு

மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள விசேட அறிவுறுத்தல்!

(UTV | கொழும்பு) –

கொழும்பில் கோவிட் 19 தொற்று அல்லது வேறு எந்த தொற்று பரவுகையும் கிடையாது என கொழும்பு மாநகரசபை அறிவித்துள்ளது.
எனினும் நோய்த்தொற்றுகள் பரவுவதினை தடுப்பதற்கு மக்கள் போதியளவு பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்ற வேண்டுமெனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கொழும்பில் தற்போதைக்கு கோவிட் அல்லது வேறு வைரஸ் தொற்றுக்கள் பரவவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும் முகக்கவசம் அணிதல் உள்ளிட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டுமெனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய நோய்த்தொற்று பரவுகை அபாயங்களை தடுக்க இவ்வாறு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டியது அவசியமானது என தெரிவிக்கப்படுகின்றது. மக்கள் அவதானத்துடன் இருக்க வேண்டுமென கோரிக்கை விடுப்பதாக கொழும்பு மாநகரசபை நிர்வாகம் அறிவித்துள்ளது. அண்மையில் கண்டி மற்றும் கம்பஹா பகுதிகளில் இரண்டு கோவிட் மரணங்கள் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

இரு அமைச்சுக்களின் விடயதானங்கள் அறிவிப்பு

போதை பொருள் – தகவல் வழங்க தொலைபேசி இலக்கங்கள் அறிமுகம்

நாடு முழுவதும் மழையுடனான வானிலை