உலகம்

மருத்துவமனைக்கு செல்வது எங்கள் உயிர்களிற்கு ஆபத்தை தேடும் விடயம் – காசா கர்ப்பிணிகள்

(UTV | கொழும்பு) –

காசாவில் மருத்துவமனைகளிற்கு செல்வது எங்கள் உயிர்களிற்கு ஆபத்தை ஏற்படுத்தும் விடயம் என இந்த மாதம்வீட்டில் குழந்தையை பிரசவித்த தாய் ஒருவர் கார்டியனிற்கு தெரிவித்துள்ளார். ஹனானிற்கு இந்தமாதம் பிரசவ வலி ஏற்பட்டவேளை அவர் வலி மருத்துவவசதி இன்றி குழந்தையை பிரசவிப்பது குறித்த அச்சம் மருத்துவமனைக்கு செல்லும் போது இஸ்ரேலின் தாக்குதல்களில் சிக்குப்படுவது குறித்த அச்சங்களின் இடையில் சிக்குண்டார்.

மருத்துவமனைகளில் மருந்துகள் மருத்துவ வசதிகள் முற்றாக முடிவடைந்துள்ளதாலும், இஸ்ரேலிய படையினர் தாக்குதல்களை மேற்கொள்வதாலும், மருத்துவமனைகள் பாதிக்கப்பட்ட மக்களின் தேவைகளை அவற்றின் சக்திக்கு அப்பால் பூர்த்தி செய்துள்ளதாலும் தனது இளைய மகனை அவர் வீட்டிலேயே பிரசவிக்க திட்டமிட்டார்.
அவர் தஞ்சமடைந்திருந்த கட்டிடத்தில் தங்கியிருந்த மருத்துவதாதியொருவர் அவருக்கு உதவ முன்வந்தார்.ஆனால் அவரால் அடிப்படை மருத்துவ ஆலோசனைகளை மாத்திரம் வழங்க முடிந்தது.

தாய் மருத்துவ உதவிகள் ,இன்றி வலி நிவாரணங்கள் இன்றி ,குழந்தையை பிரசவிக்கும் யதார்த்தத்தை ஹனானின் ஏனைய குழந்தைகள் அச்சத்துடன் கேட்டுக்கொண்டிருந்தனர்.
வலி மிகவும் வேதனையானதாக காணப்பட்டது நான் மருத்துவமனைக்கு செல்ல விரும்பினேன் ஆனால் வெளியிலிருந்த சூழ்நிலையால் அது சாத்தியமாகவில்லை என தெரிவித்துள்ள ஹனான் மருத்துவமனைக்கு செல்வது என்பது எங்கள் உயிர்களை பணயம்வைக்கும் விடயம் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

காசாவில் முற்றாக மின்சாரம் இல்லாத நிலை காணப்படுகின்றது மின்சார விநியோகம் துண்டிக்கப்பட்டுள்ளது மின்நிலையங்கள் சேதமடைந்துள்ளன இஸ்ரேலின் இரண்டு மாத தாக்குதல்கள் தடைகளால் மின்பிறப்பாக்கிகளும் செயல் இழந்துவிட்டன.
ஹனானை அந்த இரவு முழுவதும் மருத்துவதாதி பராமரிப்பதற்கு அந்த தொடர்மாடியில் வசிக்கும் பெண்கள் உதவினர்- தங்களின் கையடக்க தொலைபேசி பட்டரிகளைபயன்படுத்தி அந்த அறைக்கு வெளிச்சத்தை கொடுத்தனர்.

எங்கள் போன்களை சார்ஜ்செய்வதில் சவால்கள் உள்ளபோதிலும் நான் குழந்தையை பிரசவித்த வேளை மருத்துவ தாதிக்கு உதவுவதற்காக அவர்கள் தங்கள் கையடக்க தொலைபேசிகளை பயன்படுத்தினார்கள் என ஹனான் தெரிவித்துள்ளார்.பிரசவத்தின் போதும் அவர்கள் துணையாக இருந்துள்ளனர் ஹனான் வலியின் மத்தியில் சுவாசிப்பதற்கு ஊக்குவித்துள்ளனர்.

காசாவில் மருத்துவவசதிகளை பெற முடியாத கர்ப்பிணிப்பெண்கள் குறித்து ஐநா கடும் கவலை வெளியிட்டுள்ளது. ஒக்டோபர் மாதம் காசாவில் 50,000 கர்ப்பிணிகள் காணப்பட்டனர் சிறிதளவுமருத்துவ வசதிகள் அடிப்படை வசதிகள் அற்ற நிலையில் நாளாந்தம் 100 பேர் குழந்தையை பிரசவிக்ககூடிய நிலை காணப்பட்டது.

காசாவில் 36 மருத்துவமனைகள் செயற்பட்டன ஆனால் தற்போது 6 ஆறு மருத்துவமனைகளே இயங்குகின்றன – மானக்குண்டுவீச்சினால் யுத்தத்தினால் தாங்கள் பெரிதளவு பாதிக்கப்பட்டுள்ளதாகவும் நிலைமைய எவ்வாறு கையாள்வது என தெரியாத நிலையில் உள்ளதாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதன் காரணமாக ஹனான் போன்று பல கர்ப்பிணிகள் தங்கள் வீடுகளிலேயே பிரசவிக்கின்றனர். எனது நிலைமையாலும் தொடர் விமானக்குண்டுவீச்சினாலும் அச்சம் கடும் மனஉளைச்சலால் பாதிக்கப்பட்டிருந்த எனது குழந்தைகளின் முன்னிலையில் நான் வேதனையால் கதறினேன் அதனால் எனது மகள் அழத்தொடங்கினார் எனது ஏழு வயது மகள் அலறுவதை தவிர்ப்பதற்காக நான் வலியை பொறுத்துக்கொண்டேன் என ஹனான் தெரிவித்துள்ளார்.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

ரஷ்ய ஆயுதக்கிடங்கில் தீ : 14 கிராம மக்கள் வெளியேற்றம்

ரவிச்சந்திரனுக்கு 15 நாட்கள் பிணை

நியூசிலாந்து கிரிக்கெட்டின் தலைவராக பெண்ணொருவர் நியமனம்!