(UTV | கொழும்பு) –
களஞ்சியப்படுத்தி வைக்கப்பட்டிருந்த 10 நெல் மூட்டைகள் 2 பசளைகள் கதவு உடைக்கப்பட்டு திருடப்பட்டுள்ள சம்பவம் தொடர்பில் சம்மாந்துறை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். அம்பாறை மாவட்டம் நேற்று இச்சம்பவம் சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட உடங்கா 2 கிராம சேவையாளர் பிரிவில் இடம்பெற்றுள்ளது.
இதற்கமைய கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டிற்கமைய சம்மாந்துறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கே.டி.எஸ் ஜெயலத் தலைமையில் பெருங்குற்றப்பிரிவு பொறுப்பதிகாரி உப பொலிஸ் பரிசோதகர் கே.சதீஸ்கர் தலைமையிலான பொலிஸ் குழு புலன்விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
அத்துடன் சம்பவ இடத்திற்கு தடயவியல் பொலிஸார் வரவழைக்கப்பட்டு மேலதிக விசாரணைகளும் மேற்கொள்ளப்பட்டு வருவதும் குறிப்பிடத்தக்கது.
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්