உள்நாடுசூடான செய்திகள் 1

போதைப்பொருளுக்கு எதிரான திட்டத்திற்கு அழுத்தம் வழங்கும் அரசியல்வாதிகள்

(UTV | கொழும்பு) –

பாதாள உலகத்தினர் மற்றும் போதைப் பொருள் கடத்தல்காரர்களுடன் தொடர்புள்ள அரசியல்வாதிகள் பொலிஸாரை தரம் தாழ்த்தி அவமதிக்கும் கருத்துக்களை வெளியிட்டு வருவதாக பொது பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் தெரிவித்துள்ளார்.

கல்கிஸ்சை பொலிஸ் பிரிவின் சமூக பொலிஸ் குழுவினருக்கு விளக்கமளிக்கும் வகையில் ஹோமாகமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

சுமார் ஒன்றரை வருடங்களுக்கு முன்னர் எதிர்க்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினராக இருக்கும் போது பொது பாதுகாப்பு அமைச்சின் பொறுப்பை ஏற்குமாறு முன்னாள் ஜனாதிபதி எனக்கு அழைப்பு விடுத்தார்.

உடனடியாக பதவியை பொறுப்பேற்க விரும்பவில்லை என்ற போதிலும் ஏனைய பாராளுமன்ற உறுப்பினர்கள், ஜனாதிபதி ஆகியோரின் கோரிக்கைக்கு அமைய பொறுப்பை ஏற்க தீர்மானித்தேன்.

நாடு தீப்பற்றி எரிந்த நேரத்தில் எமக்கு மிகப் பெரிய சவால் இருந்தது. நாட்டின் தலைமைத்துவத்தில் மாற்றம் ஏற்பட்டது.

நாட்டை அமைதியான நிலைமைக்கு கொண்டு வரும் மிகப் பெரிய சவால் எமக்கு இருந்தது.

நாட்டு மக்கள் வழமை போல் செயற்படும் வகையில் நாட்டை வழமை நிலைமைக்கு கொண்டு வரும் சவால் எமக்கிருந்தது.

கொழும்பு நகரில் சில இடங்களில் எவருக்கும் செல்ல முடியாத வகையில் பல்வேறு கிராமங்கள் ஏற்படுத்தப்பட்டிருந்தன.

நாட்டுக்கு வெளிநாட்டவர்கள் வரவில்லை. அப்படி இருந்த நாட்டை மீண்டும் கட்டியெழுப்ப நேரிட்டது.

அந்த சந்தர்ப்பத்தில் நாங்கள் கடுமையான தீர்மானங்களை எடுக்க நேரிட்டது.

நாட்டுக்கு ஒழுக்கத்துடன் கூடிய அமைதியான அனைவரும் வாழக்கூடிய சூழ்நிலையை உருவாக்கும் பொறுப்பு எமக்கு வழங்கப்பட்டது.

வன்முறைகளால் மேற்கொள்ளப்படும் செயல்களில் நாட்டுக்கு நமக்கோ சிறந்தது எதுவும் நடக்காது என்பதை எதிர்ப்பில் ஈடுபட்டிருந்தவர்களுக்கு தெளிவுப்படுத்தி கூறினோம்.

இதன் பின்னர் நாட்டுக்குள் போதைப் பொருள், பாதாள உலக செயற்பாடுகள் மிகப் பெரிய சவாலாக இருந்தது. இந்த குற்றச் செயல்கள் தொடர்ந்தும் அதிகரித்து வந்தது.

பொலிஸ் அதிகாரிகளை கூட தாழ்வாக கருதுவதை காண முடிந்தது.

எனினும் சீருடையின் கௌரவத்தை பாதுகாத்து அழுத்தங்களுக்கு அடிப்பணியாமல் கடமையாற்றும் பலத்தை நாங்கள் பொலிஸ் அதிகாரிகளுக்கு வழங்கினோம்.

போதைப் பொருள் மற்றும் பாதாள உலக செயற்பாடுகள் தொடர்பில் சரியான தகவல்களுடன் கூடிய அறிக்கையை தயாரிக்குமாறு தற்போதைய பதில் பொலிஸ் மா அதிபர் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு பொறுப்பை வழங்கினேன்.

இதனடிப்படையில் கடும் நடவடிக்கைகளுடன் கூடிய வேலைத்திட்டத்தை முன்னெடுத்து வருகின்றோம்.

இந்த நிலையில் தற்போது அதற்கும் அழுத்தங்கள் கொடுக்கப்படுகின்றன எனவும் டிரான் அலஸ் குறிப்பிட்டுள்ளார்.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

A/L உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் சற்றுமுன் வெளியாகியுள்ளன.

தொற்றுக்குள்ளான 44 பேரும் கடற்படையைச் சேர்ந்தவர்கள்

அரச பாடசாலைகளுக்கு எதிர்வரும் 3ம் திகதி விடுமுறை