உள்நாடு

எரிபொருள் நிலைய உரிமையாளர்கள் திடீர் சந்திப்பு!

(UTV | கொழும்பு) –

அனைத்து சிபெட்கோ எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்களின் விசேட கூட்டம் இன்று நடைபெற உள்ளது.
இந்த சந்திப்பு கொழும்பு மன்றக் கல்லூரியில் இன்று காலை 9 மணிக்கு ஆரம்பமாகவுள்ளதுடன் எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்கள் அனைவருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தற்போது எரிபொருள் நிலையங்களுக்கு கிடைக்கும் தரகு தொகையில் 35 சதவீதத்தை பராமரிப்பு கட்டணமாக வசூலிக்க கூட்டுத்தாபனம் தயாராக உள்ளதால், சிபெட்கோ எரிபொருள் நிலையங்கள் மூடப்படும் அபாயம் உள்ளதாக எரிபொருள் விநியோகஸ்தர்கள் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது. இது தொடர்பில் இன்று விரிவாக கலந்துரையாட திட்டமிடப்பட்டுள்ளதாக கனிய எண்ணெய் பிரிப்பாளர்கள் சங்கத்தின் இணை செயலாளர் கபில நாவுடுன்ன தெரிவித்தார்.

 

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாத் பதியுதீனின் கட்சியின் தீர்மானம் இன்று

இந்தியாவில் இருந்து ஒருதொகை அரிசி இலங்கைக்கு

லங்கா ஐ.ஓ.சி நிறுவனத்திடமிருந்து டீசல் கொள்வனவுக்கு யோசனை