உள்நாடு

சுகாதார அமைச்சின் முன்னாள் செயலாளர் கைது!

(UTV | கொழும்பு) –

சுகாதார அமைச்சின் முன்னாள் செயலாளர் ஜனக ஸ்ரீ சந்திரகுப்த, குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் (CID) கைது செய்யப்பட்டுள்ளார்.

தரமற்ற இம்யூனோகுளோபுலின் ஊசிகளை இறக்குமதி செய்தது தொடர்பாக குற்றப் புலனாய்வுப் பிரிவினர் வாக்குமூலம் பதிவு செய்ததை தொடர்ந்து கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த தரமற்ற இம்யூனோகுளோபுலின் முறைகேடு தொடர்பிலான விசாரணைகளின் போது மருத்துவ வழங்கல் பிரிவின் பணிப்பாளர் உட்பட மேலும் பல அதிகாரிகள் தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். தரமற்ற இம்யூனோகுளோபுலின் ஊசிகளை இறக்குமதி செய்வது தொடர்பாக குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் சமீபத்தில் மேற்கொள்ளப்பட்ட கைதுகள், கீழ்மட்ட நபர்களை மட்டுமே குறிவைப்பதாக சுகாதார நிபுணர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் தொழிற்சங்கங்கள் கவலை தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

கொம்பனித் தெரு மக்களின் குரல்களும் குறைகளும்… [VIDE0]

பதில் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனுக்கு அபராதம் – உயர் நீதிமன்றம்

அரிசி விலையில் வீழ்ச்சி