உள்நாடு

களனி பல்கலைக்கழக மாணவர்களுக்கான விசேட அறிவிப்பு!

(UTV | கொழும்பு) –

களனிப் பல்கலைக்கழகத்தில் மூடப்பட்டுள்ள ஏனைய பீடங்களின் கல்வி நடவடிக்கைகள் இன்று முதல் மீண்டும் ஆரம்பிக்கப்படுகின்றன.

பல்கலைக்கழக மாணவர்கள் குழு ஒன்று பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் இருவரை தாக்கிய சம்பவத்தினால் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக களனி பல்கலைக்கழகத்தின் கல்வி நடவடிக்கைகள் கடந்த 5 ஆம் திகதி முதல் தற்காலிகமாக மூடப்பட்டது.

எவ்வாறாயினும் பல்கலைக்கழகத்தின் விஞ்ஞான பீடம், கணினி மற்றும் தொழில்நுட்ப பீடம், வர்த்தக மற்றும் முகாமைத்துவ பீடம் ஆகியவற்றின் கல்வி நடவடிக்கைகள் கடந்த திங்கட்கிழமை ஆரம்பிக்கப்பட்டதுடன், ஏனைய இரண்டு பீடங்களின் கல்வி நடவடிக்கைகள் இன்று ஆரம்பிக்கப்படுகின்றன.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

மேலும் 366 பேர் மீண்டனர்

அரச வாகனத்தை முறைகேடாக பயன்படுத்திய வழக்கிலிருந்து பௌசி விடுவிப்பு

இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம்