உள்நாடு

கனடாவில் ஆட்சி மாற்றத்தால் இலங்கையில் வலுப்படுத்தப்படும் சட்டங்கள் – பியர் பொலியர்

(UTV | கொழும்பு) –

கனடாவில் கென்சவேர்ட்டிவ் கட்;சி ஆட்சியமைத்தால் சர்வதேச நீதிமன்றத்தில் இலங்கை அரசாங்கத்திற்கு எதிரான சட்ட நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்காக நாங்கள் கனடாவின் வெளிவிவகார அமைச்சின் சட்டத்தரணிகளை பயன்படுத்துவோம்,என கட்சியின் தலைவர் பியர் பொலியர் தெரிவித்துள்ளார். கனடாவின் ஊடகமொன்றிற்கு வழங்கிய பேட்டியில் கனடாவில் கென்சர்வேட்டிவ் கட்சி ஆட்சியமைத்தால் தமிழர்கள் இனப்படுகொலை தொடர்பில் என்ன நிலைப்பாட்டை எடுக்கவுள்ளீர்கள் என்ற கேள்விக்கு பதிலளிக்கையில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.

1980களில் கனடாவிற்கு பெருமளவு புலம்பெயர்ந்த தமிழர்களை முதலில் வரவேற்றவர் கென்சவேர்ட்டிவ் கட்சியின் அப்போதைய பிரதமர் பிரையன் முல்ரோனி. இலங்கை அரசாங்கத்திற்கு எதிராக முதலில் சர்வதேச தடைகளை விதித்தது கொழும்பில் இடம்பெற்ற பொதுநலவாய உச்சிமாநாட்டில் கலந்துகொள்ளாமல் வெளியேறி மகிந்த ராஜபக்ச அரசாங்கத்தை அவமானப்படுத்தியது பிரதமர் ஹார்ப்பர் அரசாங்கமே. இலங்கையில் இனப்படுகொலையில் ஈடுபட்ட அரசாங்க உறுப்பினர்களிற்கு எதிராக மக்னிட்ஸ்கி தடைகளை விதிப்பதே தற்பொது என திட்டம்,இதன் மூலம் சர்வதேச தடைகள் ஊடாக அவர்களது தனிப்பட்ட நிதிகளை முடக்கலாம்.

சர்வதேச நீதிமன்றத்தில் இலங்கை அரசாங்கத்திற்கு எதிரான சட்ட நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்காக நாங்கள் கனடாவின் வெளிவிவகார அமைச்சின் சட்டத்தரணிகளை பயன்படுத்துவோம்,இதன் மூலம் இலங்கை அரசாங்கத்தின் உறுப்பினர்களை இனப்படுகொலைக்காக இனம்கண்டு சட்டநடவடிக்கைகளிற்கு உட்படுத்தலாம். தமிழர்களிற்கு எதிராக தொடரும் இனப்படுகொலை நடவடிக்கைகளிற்காக இலங்கை அரசாங்கத்தை தொடர்ந்து கண்டிப்போம் தனிமைப்படுத்துவோம்.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

பாடசாலைகளை நடத்துவது குறித்து விசேட கலந்துரையாடல்

ஊழலுக்கு கைகோர்க்கும் அரசியல்வாதிகளின் செயல்கள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் – சஜித்

DIG நுவன் மற்றும் DIG ரணசிங்க ஆகியோருக்கு இடமாற்றம்