வகைப்படுத்தப்படாத

வெள்ளவத்தையில் இடிந்து வீழ்ந்த 5 மாடி கட்டிடம்.. ; 23 பேர் காயம்

(UDHAYAM, COLOMBO) – வெள்ளவத்தை சாலிமன் வீதியில் நிர்மாணிக்கப்பட்டு வரும் 5 மாடி கட்டிடம் ஒன்று இன்று முற்பகல் இடிந்து வீழ்ந்ததில் 23 பேர் காயமடைந்துள்ளனர்.

காயமடைந்தவர்களில் 14 பேர் களுபோவில போதனா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அவர்களில் இரண்டு பேரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை தகவல்கள் தெரிவிக்கின்றன.

சம்பவத்தில் காயமடைந்த மேலும் 9 பேர் கொழும்பு தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அத்துடன் பலர் கட்டிட இடிபாடுகளுக்குள் சிக்குண்டுள்ளவர்களை பாதுகாக்க இராணுவத்தினர், காவற்துறையினர் மற்றும் தீயணைப்பு பிரிவினர் சேவையில்  இணைத்து கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, குறித்த பிரதேசத்திற்கு இரண்டு நோயாளர் காவு வண்டிகளும், 3 தீயணைப்பு வாகனங்களும் அனுப்பபட்டுள்ளதாக தீயணைப்பு சேவை திணைக்களம் தெரிவித்துள்ளது.

Related posts

Sudan junta and civilians sign power-sharing deal

Sivalingam fires Sri Lanka to 15th in Netball World Cup

நாளை நள்ளிரவு முதல் தொடரூந்து சாரதிகள் பணிப்புறக்கணிப்பில்..